ஐயப்பன் கோயிலில் சீறிய கருநாகப் பாம்பு... பதறிய பூசாரி... லாவகமாக பிடித்த மெக்கானிக்!

ஐயப்பன் கோயிலில் சீறிய கருநாகப் பாம்பு... பதறிய பூசாரி... லாவகமாக பிடித்த மெக்கானிக்!

மதுரையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் பதுங்கி இருந்த கருநாகப்பாம்பை அந்த பகுதியை சேர்ந்த மெக்கானிக் லாவகமாக பிடித்து காட்டுக்குள் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகரில் சுவாமி ஐயப்பன் கோயில் உள்ளது. கோயிலில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை கோயில் பூசாரி கைலாசநாதன்( 62) என்பவர் ஐயப்பன் சன்னதி கதவை திறந்த போது பாம்பு சீரிய சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பதறிய பூசாரி சத்தமிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் பாம்பை பிடிப்பதற்காக திருநகரை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் சகாதேவனுக்கு தகவல் தெரிவித்தனர். லாவகமாக பாம்புகள் பிடிப்பதில் வல்லவரான சகாதேவன் வந்து கதவருகே பதுங்கி இருந்த ஐந்து அடி நீள கருநாகப் பாம்பினை லாவகமாக பிடித்தார்.

பின்னர் பையில் அடைத்து புதுக்கோட்டை நாகமலை வனப்பகுதியில் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!

'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!

என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in