சுற்றுலாத் தலத்தில் வாகன நெருக்கடி 
பயணம்

மலை வாசஸ்தலங்களுக்கு வாகனங்களில் செல்ல புதிய கட்டுப்பாடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காமதேனு

உதகை, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் வாகன எண்ணிக்கையை முறைப்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் உதகை, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை உள்ளிட்டவை உள்ளன. இந்த சுற்றுலாத் தலங்களுக்கு சீசன் சமயங்களில் மட்டுமின்றி ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

மலைப்பாதைகளில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் இயக்கப்படும்போது அவ்வப்போது விபத்துக்கள் நேர்ந்து வருகிறது. மேலும் ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் மலைப்பாதையில் பயணிப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

வாகன நெருக்கடி

குறிப்பாக வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதால் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மலைப்பாதைகளில், வார விடுமுறை நாட்களில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதாக வாதிடப்பட்டது. இதனைத் தடுக்க மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. விரைவில் இந்த கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானல்
SCROLL FOR NEXT