சின்னத்திரை

பிக்பாஸ் நிகழ்ச்சி மனநிலையை பாதிக்கும் - குழந்தைகள் நல ஆர்வலர் எதிர்ப்பு

காமதேனு

'பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களை உருவகேலி செய்தல், இழிவுபடுத்துதல் அதிகமாகி வருகிறது; இதனால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் தெரிவித்துள்ளார்.

தேவநேயன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன், “குடும்பச் சூழல், சமூக சூழல் இரண்டிலும் இருந்துதான் குழந்தைகள் பலவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். 'பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களை உருவகேலி செய்தல், இழிவுபடுத்துதல் அதிகமாகி வருகிறது. ஆணாதிக்க சிந்தனையின் எச்சங்களும் நிகழ்ச்சியில் பரவியுள்ளன.

இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்கும்போது, அவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது. இது குழந்தைகளிடையே வன்மத்தை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

SCROLL FOR NEXT