Hashtag, Thangam Thennarasu 
மாநிலம்

வி வாண்ட் குரூப்2 ரிசல்ட்... இந்திய அளவில் டிரெண்டிங்!

காமதேனு

குரூப் 2 ரிசல்ட் தாமதமாகி வரும் நிலையில் வி வாண்ட் குரூப் 2 ரிசல்ட் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 5, 446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இதனை 55,041 தேர்வர்கள் எழுதினர்.

TNPSC Office Building

ஆனால், 10 மாதங்கள் கடந்தும் இதுவரை முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் கேட்டபோது, குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், எஞ்சிய 20 சதவீத பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடிவடையும் என்றும் தெரிவித்திருந்தனர்.

தங்கம் தென்னரசு

இதனால் டிசம்பர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், குரூப்-2 தேர்வு முடிவு குறித்த தேதி அறிவிப்பு நேற்று மாலை வெளியாகும் என மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாவது தொடர்ந்து காலதாமதம் ஆவதால் விரக்தியடைந்துள்ள தேர்வர்கள், உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். வி வாண்ட் குரூப் 2 ரிசல்ட் என்ற ஹேஷ்டேகுடன் இந்த பதிவுகள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


ஐந்து பேரை காவு வாங்கிய ஐயப்ப பக்தர்கள் பேருந்து... ஆட்டோ மீது மோதியதில் மேலும் பலர் படுகாயம்!

ஒரே நாளில் ரூ.192 கோடி வருமானம்: பத்திரப்பதிவுத்துறை தகவல்

கருகலைப்புக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவர் மீது வழக்குப்பதிவு

ஆம்னி பேருந்து- லாரி மோதி விபத்து: 2 ஓட்டுநர்களும் உயிரிழப்பு! உயிர் தப்பிய பயணிகள்

சரியும் தாவணி... மயக்கும் கண்கள்... அதிதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT