கோப்புப்படம்
கோப்புப்படம்  
மாநிலம்

விபத்தில் சிக்கியவர்களின் மதுவாசனையை பதிவு செய்ய வேண்டும்... அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

காமதேனு

விபத்துக்களில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்களின் மீது மது வாசனை இருந்தால், அதன் அளவை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்று காயமடைந்த ரமேஷ் என்பவர் இழப்பீடு கோரி பெரம்பலூர் விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மருத்துவ அறிக்கையை மேற்கோள்காட்டி, ரமேஷ் மீது மது வாசனை வீசியதாலும், பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றாததாலும் விபத்துக்கு அவரும் காரணம் எனக் கூறி, 50 சதவீத இழப்பீடாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 952 ரூபாய் வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மது வாசனை வீசியதாக கூறிய போதிலும், அதன் அளவை குறிப்பிடவில்லை எனவும், மாநிலத்தில் உள்ள சாலைகளில் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்ற முடியாது எனவும் கூறி, ரமேஷுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை 3 லட்சத்து 53 ஆயிரத்து 904 ரூபாயாக அதிகரித்து வழங்க உத்தரவிட்டார். மது அருந்துவதை குற்றமாக கருத முடியாது எனவும், மதுபானத்தை அரசே விற்பதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோப்புப்படம்

மேலும், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்கள் மீது மது வாசனை இருந்தால், அதன் அளவுகளை அறிக்கைகளில் பதிவு செய்ய வேண்டும் எனவும், பல வழக்குகளில் அந்த அளவுகள் பதிவு செய்யப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதன் காரணமாக விபத்து வழக்குகளில் காயமடைபவர்களுக்கு உரிய இழப்பீட்டை தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அதனால், விபத்துக்களில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்களின் மீது மது வாசனை இருந்தால், அதன் அளவுகளை அறிக்கைகளில் பதிவு செய்வதை கட்டாயமாக்கி அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

SCROLL FOR NEXT