பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் 
மாநிலம்

13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... மர்மக் கும்பலை பிடிக்க அமைச்சர் அன்பில் மகேஸ் அவசர உத்தரவு!

காமதேனு

சென்னையில் 13 பள்ளிகளைக் குறிவைத்து மர்ம நபர்கள் இன்று பிற்பகலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால் சென்னையின் பல இடங்களில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், மிரட்டல் விடுத்த மர்ம கும்பலை கூண்டோடு பிடிக்க அமைச்சர் அன்பில் மகேஸ் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் அண்ணாநகரில் இயங்கி வரும் 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஜெ.ஜெ.நகர் பகுதியில் இயங்கி வரும் 2 தனியார் பள்ளிகள் மற்றும் பாரிமுனையில் உள்ள பள்ளிகள் என 13 பள்ளிகளுக்கு இன்று பிற்பகல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் பள்ளிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், இது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இதனிடையே, பள்ளிகளில் இருந்து மாணவர்களை உடனடியாக அழைத்துச் செல்லும்படி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பின. தகவல் அறிந்து பதறிய பெற்றோர் பள்ளிகளில் குவிந்தனர். இதனால், அண்ணாநகர் மற்றும் ஜேஜே நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், யாரும் பதற்றப்பட வேண்டாம் என்றும், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்றும் போலீஸார் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் சென்னையில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் ஆணையர் பிரேம் ஆன்ந்த் சின்ஹா

இந்நிலையில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கூண்டோடு பிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் சென்னை காவல் ஆணையருடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் மர்ம நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

SCROLL FOR NEXT