வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம் (கோப்பு) 
மாநிலம்

தமிழ்நாட்டில் பிப்ரவரி 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்... வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு!

காமதேனு

தமிழ்நாட்டில் பிப்ரவரி 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த அமைப்பினர் வரும் பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த சூழலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஊழியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சங்கம் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அனைவருக்கும் சரியான விகிதத்தில் மாதச் சம்பளம் வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் நிரப்படாமல் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவற்றை எல்லாம் அரசு உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பிப்ரவரி 13-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வருவாய்துறை அலுவலர்களும் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளனர்.

வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம் (கோப்பு படம்)

தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 22 முதல் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும், பிப்ரவரி 27-ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வருவாய்த் துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

SCROLL FOR NEXT