அல்வா வழங்கிய திமுகவினர் 
மாநிலம்

டெல்லியில் பாஜக வெள்ளை அறிக்கை... தமிழகத்தில் திமுக அல்வா கொடுக்கும் போராட்டம்!

காமதேனு

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய பாஜக அரசு வெள்ளை அறிக்கை தரவிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கு உரிய நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கி இருக்கிறார்கள்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

மத்திய அரசு மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வை வழங்குவதில்லை என திமுக உள்ளிட்ட பிராந்திய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக அரசு வரி வருவாயில் 1 ரூபாயை மத்திய அரசுக்கு அளித்தால், 29 பைசா மட்டுமே திருப்பித் தரப்படுவதாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை எனக் கூறி, நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி-க்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர்.

கர்நாடகா போராட்டம்

இந்த சூழலில், தற்போது கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் இந்த குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றன. கர்நாடக முதல்வர் ஒருபடி மேலே போய் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினர். இதில் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில், இன்று தமிழகம் மற்றும் கேரளா சார்பில் போராட்டம் நடத்தப்படகிறது.

திமுகவினர் வழங்கிய அல்வா

இந்த நிலையில், மத்திய அரசு பாரபட்சமாக நிதிப்பகிர்வு செய்வதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தை இன்று நடத்தி இருக்கிறது திமுக.

சென்னையில் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்தனர். சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கும் திமுகவினர் அல்வா வழங்கினர்.

அல்வாவுடன் இலவச இணைப்பாக இணைக்கப்பட்ட நோட்டீசில் ‘ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ஜீரோ’ என ஆங்கிலத்தில் அச்சடித்து அதில் ஒரு அல்வா துண்டை இணைந்து வழங்கி வருகின்றனர். திமுகவினரின் இந்த நூதன போராட்டம் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரமாகவும் மாறி இருப்பது குறிப்பிடத் தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

SCROLL FOR NEXT