டி20 உலகக்கோப்பை ஹாட்ஸ்டார் 
விளையாட்டு

டி20 உலகக் கோப்பையை மொபைலில் இலவசமாக பார்க்கலாம்... ஹாட்ஸ்டாரின் அட்டகாச அறிவிப்பு!

காமதேனு

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் செயலி மூலம் இலவசமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியானது ஜூன் 2ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை மொபைலில் தங்களின் ஓடிடி தளத்தில் இலவசமாகப் பார்க்க முடியும் என்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை தொடர் ஹாட்ஸ்டாரில் இலவசமாக ஒளிபரப்பப்பட்டது.

டி20 உலகக்கோப்பை ஹாட்ஸ்டார்

இது குறித்து கருத்து தெரிவித்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தியாவின் தலைவர் சஜித் சிவானந்தன், "ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை- 2024 தொடரை மொபைலில் இலவசமாக வழங்குவதன் மூலம், கிரிக்கெட் விளையாட்டை மேலும் அணுகக்கூடியதாகவும், நாடு முழுவதும் பரந்த பார்வையாளர்களை சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளையும் மொபைலில் இலவசமாக வழங்கினோம். இது பார்வையாளர்களை கணிசமாக விரிவுபடுத்த எங்களுக்கு உதவுகிறது" என்று கூறினார்.

டி20 உலகக்கோப்பை

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியானது, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் கலந்துகொண்டு மொத்த 55 போட்டிகளில் விளையாட உள்ளன.

இதில் ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT