விளையாட்டு

நியூசிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு!

ஆர்.தமிழ் செல்வன்

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 108 ரன்னும், கேப்டன் கேன் வில்லியம்சன் 95 ரன்னும் எடுத்தனர்.

பெங்களூரு சின்னசாமி மைதானம்

402 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் தொடக்க ஆட்டக்காரர் பஃகார் ஜமான் 9 சிக்ஸர் அடித்து நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை ஸ்தம்பிக்க செய்தார். அந்த அணி 21.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 160 ரன் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜமான் 106 ரன்னுடனும், கேப்டன் பாபர் அசாம் 47 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போதைய சூழலில் போட்டி கைவிடப்பட்டால் டிஆர்எஸ் முறைப்பாடி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். டிஆர்எஸ் விதிப்படி அந்த அணி 21 ஓவரில் 150 ரன் எடுத்திருந்தாலே போதும், ஆனால், பாகிஸ்தான் 10 ரன் கூடுதலாகவே எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT