டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை 
விளையாட்டு

டி 20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!

காமதேனு

ஜூன் 1-ம் தேதி தொடங்கும் 2024-ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

9வது டி20 உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.

டி20 உலகக்கோப்பை போட்டி

அதன் பின்னர் சூப்பர் 8 போட்டிகளும், 2 குரூப்புகளாக பிரிக்கப்பட்டு அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இதைத்தொடர்ந்து வருகிற ஜூன் 30-ம் தேதி இறுதிப் போட்டி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1-ம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கானப் போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி குரூப் ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட ஆணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ’பி’ பிரிவில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் உள்ளிட்ட 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.

கிரிக்கெட்

குரூப் ’சி’ பிரிவில் நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூகினியா உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ’டி’ பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாள் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஜூன் 1-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோத உள்ளன.

இந்தியாவிற்கு முதல் போட்டி ஜூலை 5-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்ளும். ஜூன் 9-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகளும், ஜூன் 12-ம் தேதி இந்தியா-அமெரிக்கா அணிகளும், ஜூன் 15-ம் தேதி இந்தியா-கனடா அணிகளும், பலப்பரீட்சை நடத்த உள்ளன.

டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளிலும், இறுதிப்போட்டி ஜூன் 29ம் தேதியும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT