மூன்றாம் பாலினத்தவர் 
அரசியல்

மூன்றாம் பாலினத்தவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும்... தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!

காமதேனு

உயர்கல்வி பயில விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்றும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றம்

2024 - 25  ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக மூன்றாம் பாலினத்தவர் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி உயர்கல்வி பயில விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி மற்றும் விடுதிச் செலவுகள் முழுவதையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மூன்றாம் பாலினத்தவரின் உயர் கல்வி கனவுகள் இனி எளிதாக நிறைவேறும்.

மூன்றாம் பாலினத்தவர்

மேலும் இந்த நிதிநிலை அறிக்கையில் மகளிர் மேம்பாட்டுக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 13,720 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் இலவச பயணம்  செய்யும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பத்தாயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும் என்று பெண்களுக்கான திட்டங்களுக்கும் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி தேதி... இந்திய ரயில்வேயில் 5,696 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

இன்று தமிழக பட்ஜெட் 2024 தாக்கல்... இடம் பெறுகிறது மாபெரும் ஏழு தமிழ் கனவுகள்!

அடுத்தக் கட்ட அதிரடி ... நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் இன்று திடீர் ஆலோசனை!

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி?... விமான நிலையத்தில் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி!

21ம் தேதி முதல் மீண்டும் போராட்டம் தொடரும்: 4வது சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயிகள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT