மகளிர் உரிமைத் தொகை பெற்றவர்கள் 
அரசியல்

குட்நியூஸ்;1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை:வெளியானது முக்கிய அறிவிப்பு!

காமதேனு

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற மேல்முறையீடு செய்துள்ளவர்களுக்கு நவம்பர் 25-ம் தேதி முதல் குறுந்தகவல் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

உரிமைத் தொகை பெற்ற பெண்கள்

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு மாதங்களாக ஆயிரம்  ரூபாய் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு கோடியே 6 லட்சம் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பித்தவர்களில் 56.50 லட்சம் பேரில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தகுதிகள் இருந்தும் ஏராளமான பெண்களின் உரிமைத்தொகை விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி லட்சக்கணக்கானவர்கள் மேல் முறையீடு செய்தனர். 

மேல்முறையீடு செய்தவர்கள்

அதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் மொத்தம் பதினோரு லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் கூடி இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், நவம்பர் 25-ம் தேதி முதல் இவர்களுக்கு குறுந்தகவல்  அனுப்பப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!

குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?

அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!

ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!

SCROLL FOR NEXT