பிரேமலதா விஜயகாந்த் 
அரசியல்

நீட் தேர்வை ஒழிக்கவே முடியாது... திமுகவுக்கு பிரேமலதா விஜயகாந்த் சவால்!

காமதேனு

திமுகவினர் 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் கூட நீட் தேர்வை ஒழிக்க முடியாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ’நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் 50 நாட்களில் 50 லட்சம் மாணவர்களிடம் கையெழுத்து  பெறுவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக பெறப்படும் கையொப்பங்களை ஆவணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்ப திமுக திட்டமிட்டுள்ளது. திமுகவின் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். "அரசியல் ஆதாயத்திற்காக திமுக தொடர்ந்து மாணவர்களைக் குழப்பி வருகிறது.  50 லட்சம் கையெழுத்துக்கள் மட்டுமல்ல,  50 கோடி கையெழுத்துக்கள் வாங்கினாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது.

இது இல்லை என்றால் அடுத்ததாக எதற்கும் உதவாத சனாதனத்தைப் பற்றி பேசுவார்கள். ஆளுநர் மாளிகை மீது நடைபெற்றுள்ள தாக்குதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு மிகப்பெரிய உதாரணம்" என்றார்.

SCROLL FOR NEXT