அரியலூரில் முந்திரி விவசாயி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
அரியலூரில் முந்திரி விவசாயி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை 
அரசியல்

முந்திரி விவசாயி வீட்டில் அடுத்தடுத்து வருமான வரித்துறை சோதனை... அரியலூரில் பரபரப்பு!

காமதேனு

அரியலூர் அருகே முந்திரி விவசாயியின் வீட்டில் திடீரென வருமானவரித்துறையினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் அதிகாரிகள் திரும்பச் சென்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலசாமி (80). இவர் 25 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி, நிலக்கடலை உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களை விவசாயம் செய்து வருகிறார். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வட்டித் தொழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் கணக்கில் வராத பணம் இருப்பதாக தேர்தல் தொடர்பான நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

அடைக்கலசாமி என்ற விவசாயி வீட்டில் அடுத்தடுத்து சோதனை

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற சிலம்பரசன் தலைமையிலான கண்காணிப்பு படையினர், தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய ஆய்வின் போது, வீட்டில் சில லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து விவசாய அடைக்கலசாமியிடம் கேட்டபோது, அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம், தனது பேத்தியின் திருமணத்திற்காக ஏற்பாடு செய்து வைக்கப்பட்ட பணம் என கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்யாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

வீட்டில் பணம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து சோதனை என தகவல்

இதனிடையே திருச்சியில் இருந்து வருமானவரித்துறை துணை ஆணையர் கண்ணன் தலைமையில் இன்று அடைக்கலசாமி வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். தேவைப்படும் நேரத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அடைக்கலசாமியின் வீட்டில் இருந்து ரொக்கப்பணம் உள்ளிட்ட எந்த ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

SCROLL FOR NEXT