அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம் 
அரசியல்

விதிகளை மீறி அண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்... உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

காமதேனு

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்தை எதிர்த்து திமுக எம்எல்ஏ-வான பரந்தாமன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்தை எதிர்த்து பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும் திமுக எம்எல்ஏ-வுமான பரந்தாமன், உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், 'சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த பதிவாளர் பதவியை நிரப்புவது தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பதிவாளராக டாக்டர் பிரகாஷ் என்பவரை நியமிக்க பல்கலைக்கழக துணைவேந்தர் கருத்துருவை முன் வைத்தார். இதற்கு சிண்டிகேட் எதிர்ப்பு தெரிவித்ததுடன் காலியிடம் குறித்து விரிவான விளம்பரம் அளித்து அதன் பிறகு நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம்

ஆனால், சிண்டிகேட்டின் அடுத்த கூட்டத்தில் பிரகாஷை பதிவாளராக நியமிப்பது தொடர்பான கருத்துருவை துணைவேந்தர் மீண்டும் கொண்டு வந்ததுடன் அவரை நியமித்து உத்தரவிட்டார். சிண்டிகேட்டின் 13 உறுப்பினர்களில் 9 பேர் பிரகாஷை பதிவாளராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் திருத்தம் செய்து ஆறு உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி பிரகாஷை நியமித்தது பல்கலைக்கழக விதிகளுக்கு முரணானது. அதனால், பதிவாளர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். சிண்டிகேட் கூட்டங்களின் வீடியோ பதிவை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

தமிழக அரசு

இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, அண்ணா பல்கலைக்கழகம், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், சிண்டிகேட் கூட்டங்களின் வீடியோக்களை பத்திரப்படுத்தும்படி, பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

SCROLL FOR NEXT