எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி
எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி 
அரசியல்

அரசியல் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்... பழனிசாமி பதவிசாய் கோரிக்கை!

காமதேனு

”அரசியல் ஆதாயத்திற்காக கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துக்களை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்கள் குறித்து பேசிய பேச்சுக்கள் சர்ச்சையானது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சி தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சி பதவியில் உள்ள பிரதமர் போன்றவர்களும் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல. இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

எடப்பாடி பழனிசாமி

இது போன்ற கருத்துக்களை அவர்கள் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும் மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. இது சிறுபான்மையினர் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளை தூண்டும் விதமாகவும் அமைகிறது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இது போன்ற மததுவேச கருத்துக்களை யார் பேசினாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ’கண்டனம்’ என்ற வார்த்தை இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

SCROLL FOR NEXT