அமைச்சர் செந்தில் பாலாஜி 
அரசியல்

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு... அதிகாலையில் தொடங்கிய அதிரடி!

காமதேனு

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அமலாக்கத்துறை

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் மத்திய அமலாக்க துறையால் கடந்த ஆண்டு  ஜூன் 5-ம் தேதி  கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருடைய தம்பி தொடர்புடைய இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் பலமுறை ஈடுபட்டனர்.

அதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க தொடர்ந்து அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை பிடிக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை

இந்தநிலையில் அவரது கரூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரபட்டியில் உள்ள வீட்டில் செந்தில்பாலாஜியின்  பெற்றோர் வசித்து வருகிறார்கள்.  அங்கு இன்று காலை கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

SCROLL FOR NEXT