சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் 
அரசியல்

ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன்: ஜெகன்மோகன் ரெட்டி ஷாக்!

காமதேனு

திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். 53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக ஆந்திர உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 31-ம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

சிறையில் இருந்து வெளியில் வந்த நாயுடு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

மேலும் நவ.28-ம் தேதி தாமாகவே முன்வந்து அவர் ராஜமுந்திரி மத்திய சிறைக் கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டுமென்று அவருக்கு வழங்கிய இடைக்கால ஜாமீன் நிபந்தனையில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து நவ.28-ல் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திரா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

சந்திரபாபு நாயுடு

மேலும் நவ.29-ம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளைச் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக சந்திரபாபு நாயுடு நவ.29-ம் தேதி வரை அரசியல் நிகழ்ச்சிகள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT