மக்களவையில் பேசிய பிரதமர் மோடி 
அரசியல்

தாழ்வு மனப்பான்மையால் பிரதமர் மோடி பாதிக்கப்பட்டுள்ளார்... காங்கிரஸ் கடும் தாக்கு!

காமதேனு

பாதுகாப்பின்மை, தாழ்வு மனப்பான்மையால் பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “மறைந்த முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் நாட்டு மக்களின் திறன் மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் மக்களின் திறன் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என விமர்சித்து பேசினார்.

இந்நிலையில் பிரதமரின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நேற்று மக்களவையில் அபத்தமாக செயல்பட்டுள்ளார். இன்றும் மாநிலங்களவையில் சந்தேகத்துக்கிடமின்றி அவர் மீண்டும் அவ்வாறே செயல்படுவார். அவர் மிகுந்த பாதுகாப்பின்மை மற்றும் தாழ்வுமனப்பான்மையால் அவதிப்படுகிறார். இதனாலேயே அவர் நேருவை அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் கொடூரமாகத் தாக்கிப் பேசி வருகிறார்.

ஜெய்ராம் ரமேஷ்

வாஜ்பாய், அத்வானி கூட இதை ஒருபோதும் செய்யவில்லை. ஆனால் மோடி, தன்னை புத்திசாலி என்று நினைக்கிறார். ஆனால் உண்மையில் அவர் கொண்டிருக்கும் பதவியை இழிவுபடுத்துகிறார். 'மெகாலோமேனியா' மற்றும் 'நேருபோபியா' ஆகியவை இந்தியாவில் ஜனநாயகத்தின் கொலைக்கு வழிவகுக்கும் ஒரு நச்சு கலவையாகும். இந்திய மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இதுவே பிரதமராக மக்களவையில் மோடியின் கடைசி உரையாக இருக்கும் என முடிவு செய்துவிட்டனர். 10 ஆண்டு அநீதி விரைவில் முடிவுக்கு வரும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

SCROLL FOR NEXT