நாமக்கல்லில் வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம்
நாமக்கல்லில் வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் 
அரசியல்

நள்ளிரவில் சீறிப்பாய்ந்த கார்... கட்டுக்கட்டாக ரூ.2.83 கோடி பறிமுதல்; அதிர்ந்த அதிகாரிகள்!

காமதேனு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு எடுத்துவரப்பட்ட 2.83 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொதுமக்கள் பணம் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை ஆய்வின் போது வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், கரூரிலிருந்து வேகமாக வந்துக் கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சோதனையின் போது காரில் உரிய ஆவணங்கள் இன்றி கட்டு கட்டாக பணம் எடுத்து செல்வது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை கொண்டு வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது வங்கி ஏடிஎம்மில் நிரப்புவதற்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாக தனியார் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் ரூ. 2.83 கோடி மதிப்பிலான பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் அதனை தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...   

+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்... ஸ்காலர்ஷிப் விவரங்கள்!

ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்... பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

"தம்பி அண்ணாமலை... பார்த்து நடந்துக்க... ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா..." பகிங்கிரமாக எச்சரித்த பழனிசாமி!

தடுப்புகளைத் தாண்டி  இனிப்புக் கடைக்குச் சென்ற ராகுல்... ஸ்டாலினுக்கு வழங்கி அன்புப் பரிமாற்றம்!

தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்களின் டார்கெட்... கரூரை கைப்பற்றப் போவது யாரு? கள நிலவரம் இதுதான்!

SCROLL FOR NEXT