காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி 
செய்திகள்

வயநாடு, ரேபரேலியில் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை!

வ.வைரப்பெருமாள்

காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி தான் போட்டியிட்ட வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி தேசியளவில் பாஜக கூட்டணி 297 இடங்களிலும், இந்தியா கூட்டணி 227 இடங்களிலும், மற்ற கட்சிகள் 19 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

மக்களவைத் தேர்தல்

தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் வெற்றி நிலவரங்களை தெரிந்து கொள்வதில் மக்களிடையே எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி பிரதமர் மோடி வாராணசி தொகுதியில் காலையில் முதலில் வெளியான தகவல்படி பின்தங்கியிருந்தார். பின்னர் அடுத்தகட்ட சுற்று முடிவுகளில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை பெற்றார்.

இதேபோல், பிரதமர் மோடிக்கு தேசிய அளவில் சவால் அளிக்கும் காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி தேர்தலில் பெற்ற வாக்குகள் நிலவரம் குறித்தும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி இந்த முறை உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம், வயநாடு ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டார்.

ரேபரேலி, வயநாடு மக்களவை தொகுதி

இந்நிலையில் இன்று காலை வெளியான முதல்கட்ட தகவல்களின் படி ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே ராகுல் காந்தி, முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, வயநாட்டில் ராகுல் காந்தி 98,628 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையிலும், ரேபரேலியில் 50,589 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உத்தரப் பிரதேசத்தில் சஹாரன்பூர், அம்ரோஹா, ஃபதேபூர் சிக்ரி, சீதாப்பூர், ரேபரேலி, அமேதி, பாரபங்கி ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

SCROLL FOR NEXT