கழிவறையில் சடலமாக கிடந்த சிஐஎஸ்எஃப் வீரர் சக்கிரதார் 
செய்திகள்

அதிர்ச்சி... விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு சிஐஎஸ்எஃப் வீரர் தற்கொலை

கே.காமராஜ்

கோவை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான சோதனை பணிகளில் ஈடுபடுகின்றனர்.

கோவை விமான நிலையம்

விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்வது மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது ஆகிய பணிகளில் அவர்கள் இயங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிஐஎஸ்எஃப் வீரர்கள் 3 ஷிப்டுகளில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சக்கிரதார் என்ற சிஐஎஸ்எஃப் வீரர் பணியில் இருந்து வந்தார். இன்று காலை கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்ப வராத நிலையில், கழிவறையில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால், சகவீரர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளனர்.

கோவை விமான நிலையம்

அப்போது தனது கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சக்கிரதார் கழிவறையில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு பாதுகாப்பு படையினர் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு காவல் நிலையம்

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை என்பதால் பரபரப்புடன் காணப்படும் கோவை மாநகரில் நடைபெற்றுள்ள இந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

SCROLL FOR NEXT