பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் 
செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம்; மக்களவையை கலைக்க முடிவு!

வ.வைரப்பெருமாள்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

பிரதமர் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் தனித்து கிடைக்கவில்லை. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை பாஜகவுக்கு உள்ளது. இந்நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க, டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

காலை 11.30 மணிக்கு இக்கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடியின் இரண்டாவது பதவிக்காலத்தில் நடைபெறும் கடைசி அமைச்சரவை கூட்டம் இதுவாகும். மேலும், இக்கூட்டத்தில் தற்போதைய மக்களவையை கலைக்கவும் அமைச்சரவை பரிந்துரைக்க தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய 17வது மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பாஜக தனித்து 240 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மையையும் (293) பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 99 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி 234 இடங்களையும் கொண்டுள்ளது. இச்சூழலில் இன்று மாலை இந்தியா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகக் கூடும். இதன் பிறகே மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

SCROLL FOR NEXT