நீதிமன்றத்துக்கு ஜீன்ஸ் அணிந்து வர அனுமதி மறுப்பு 
தேசம்

ஜீன்ஸை அனுமதித்தால் கிழிந்த ஜீன்ஸ், பைஜாமா என வந்து விடுவீர்கள்... வக்கீலை பின்னியெடுத்த நீதிபதி!

காமதேனு

நீதிமன்றத்தில் ஜீன்ஸ் அணிய முடியும் என்றால், மனுதாரர் அடுத்ததாக கிழிந்த ஜீன்ஸ், மங்கலான ஜீன்ஸ், அச்சிடப்பட்ட ஜீன்ஸ் ஆகியவற்றில் நீதிமன்றத்தில் ஆஜராக ஏன் அனுமதிக்கப்படக்கூடாது எனக் கேட்கலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

கவுகாத்தி உயர் நீதிமன்றம்

அசாம் மாநிலம், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் தொழில்முறை ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒரு விசித்திர முறையீடு வந்தது. வழக்கறிஞர் பிஜான்குமார் மகாஜன் என்பவர் கடந்த ஆண்டில் ஜீன்ஸ் அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரானதற்காக கண்டனங்களை எதிர்கொண்டார். இதனால் அவர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் 27-ம் தேதி ஜாமீன் விசாரணை வழக்கு ஒன்றின்போது, வழக்கறிஞர் மகாஜன் ஜீன்ஸ் அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனைக் கண்ட நீதிபதி, காவல் துறையினர் மூலம் வழக்கறிஞர் மகாஜனை நீதிமன்றத்திலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.

இந்நிலையில், "தனது ஆடை, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. உயர் நீதிமன்றத்தின் விதிகள் குறிப்பாக ஜீன்ஸை விலக்கவில்லை. இந்த விஷயத்தில் போலீஸ் தலையீடு தேவையற்றது” எனக் கூறி, கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

வழக்கறிஞர் ஆடை

இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி சுரானா, “நீதிமன்றத்தில் ஜீன்ஸ் அணிய முடியும் என்றால், மனுதாரர் அடுத்ததாக கிழிந்த ஜீன்ஸ், மங்கலான ஜீன்ஸ், அச்சிடப்பட்ட ஜீன்ஸ் ஆகியவற்றில் நீதிமன்றத்தில் ஆஜராக ஏன் அனுமதிக்கப்படக்கூடாது எனக் கேட்கலாம்.

ஆடை குறியீடு இணக்கத்தை அமல்படுத்துவதற்கான உரிமை நீதிமன்றத்துக்கு உள்ளது. தொழில்முறை நடத்தை விதிகள் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் கவுகாத்தி உயர் நீதிமன்ற விதிகளுடன் ஒத்துப்போக வேண்டும்” என்று கூறினார்.

இந்த சம்பவம் சட்டத் தொழிலின் தர நிலைகளையும், நீதித்துறையின் எல்லைக்குள் அவற்றை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

SCROLL FOR NEXT