லட்சத்தீவு 
தேசம்

லட்சத்தீவை சர்வதேச சுற்றுலா மையமாக மேம்படுத்த ரூ.3,600 கோடி... மத்திய அரசு சூப்பர் திட்டம்!

காமதேனு

லட்சத்தீவை சர்வதேச அளவிலான சுற்றுலா மையமாக மேம்படுத்த ரூ.3,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

லட்சத்தீவு

இந்தியாவின் யுனியன் பிரதேசங்களில் ஒன்று லட்சத்தீவு. அந்தமானுக்கு அடுத்தபடியாக இந்தியாவிற்கு சொந்தமான தீவுப்பகுதியாக உள்ளது. ஆனால், லட்சத்தீவு, அந்தமான் அளவுக்கு சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடமாக இல்லை. அதற்கான முக்கிய காரணமாக இருப்பது, அதன் உட்கட்டமைப்பு வசதிகள். கேரள கடற்கரையிலிருந்து 220 கி.மீ. முதல் 440 கி.மீ. தூரம் வரை 36 தீவுகளாக 32 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு உள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் அங்கு சென்ற பிரதமர் மோடி, லட்சத்தீவின் அழகை வர்ணித்திருந்தார். இது வைரலான நிலையில், மாலத்தீவின் சுற்றுலா பாதிக்கும் அபாயம் இருப்பதாக கூறி அந்நாட்டு அமைச்சர்கள் சிலர் மறைமுகமாக பிரதமரை விமர்சித்திருந்தனர்.

லட்சத்தீவு

இது பெரும் சர்ச்சையான நிலையில், பல இந்தியர்கள் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டு, லட்சத்தீவு செல்ல உள்ளதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மத்திய அரசு அங்குள்ள ஆன்ட்ரோத், கல்பேனி, கடாமத் தீவுகளில் துறைமுக வசதிகள் ஏற்படுத்தவும், இதற்கான நிதி, துறைமுகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்நிலையில், லட்சத்தீவு மேம்பாட்டிற்காக ரூ.3,600 கோடி நிதி ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் லட்சத்தீவு விரைவில் சர்வதேச சுற்றுலா மையங்களில் முக்கியமான ஒன்றாக மாறும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

SCROLL FOR NEXT