பம்பாய் உயர்நீதிமன்றம் 
தேசம்

முகலாயர் காலத்து பெயர்களை மாற்றும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு... பம்பாய் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

காமதேனு

மகாராஷ்டிராவில் நகரங்களின் முகலாயர் காலத்து பின்னணியிலான பெயர்களை மாற்றிய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கலான, பல்வேறு மனுக்களையும் பம்பாய் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஔரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய மாவட்டங்களின் பெயர்களை மாற்றும் மகாராஷ்டிர அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை பம்பாய் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி அரிஃப் டாக்டர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் எந்த அரசியல் நோக்கமோ, தலையீடோ இல்லை என்று கூறியுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

ஔவுரங்காபாத் மாவட்டத்தை சத்ரபதி சம்பாஜிநகர் என்றும், உஸ்மானாபாத் மாவட்டத்தை தாராஷிவ் என்றும், பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் இவ்வாறு தள்ளுபடி ஆயின. மாவட்டங்கள் மற்றும் நகரங்களின் பெயர்களை மாற்றம் செய்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்று கூறுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அரசு முடிவை எதிர்க்கும் மனுக்கள் தகுதியற்றவை என்பதால் அவை தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2022-ம் ஆண்டில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அமைச்சரவை, ஔவுரங்காபாத்தை சத்ரபதி சம்பாஜிநகர் என்றும், உஸ்மானாபாத்தின் பெயரை தாராஷிவ் என்றும் அங்கீகரித்தது. ஜூலை 16, 2022 அன்று, பெயர்களை மாற்றுவதற்கான அரசாங்கத் தீர்மானம் அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்டு, பின்னர் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. பிப்ரவரி 2023 இல், நகரங்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களை மாற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடையில்லா கடிதத்தை வழங்கியது.

அதன்பிறகு, ஔவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகியவற்றின் பெயர்களை மாற்றி மாநில அரசால் அரசிதழ் அறிவிப்பு வெளியிட்டது. தங்கள் இடத்தை சத்ரபதி சம்பாஜிநகர் என பெயர் மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து ஔவுரங்காபாத் குடியிருப்பாளர்கள் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்தனர். உஸ்மானாபாத்தை தாராஷிவ் என்று பெயர் மாற்றும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்தும் அப்பகுதியின் 17 குடியிருப்பாளர்களால் மேலும் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மகாராஷ்டிர முதல்வர்கள்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே(மத்தியில்), துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னவிஸ்(இடது) மற்றும் அஜித் பவார்(வலது)

இந்த இரண்டு மனுக்களும் அரசாங்கத்தின் முடிவு ’அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று முறையிட்டது. மகாராஷ்டிரா அரசு சார்பில் இந்த மனுக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து வாதம் செய்யப்பட்டது. இரண்டு இடங்களும் அவற்றின் வரலாற்று பின்புலத்தின் காரணமாக மறுபெயரிடப்பட்டதாகவும், எந்த அரசியல் காரணங்களுக்காகவும் அவை அமையவில்லை என்றும் விளக்கம் தந்தது.

பாஜக நேரடியாக மட்டுமன்றி மகாராஷ்டிரா போன்று கூட்டணி வாயிலாக ஆளும் மாநிலங்களும், இந்த பெயர் மாற்றம் புதிய அலையாக அதிகரித்து வருகிறது. முகலாயர் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட பெயர்களை, இந்த வகையில் ஆட்சியாளர்கள் வேகமாக மாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பம்பாய் நீதிமன்றம் இன்று வெளியிட்டிருக்கும் உத்தரவு, பாஜக ஆட்சியிலான வெவ்வேறு மாநிலங்களிலும் பெயர் மாற்றத்துக்கு உத்வேகம் தரக்கூடியவை.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT