டெல்லி ஜல் வாரியம் 
தேசம்

ஜல் வாரிய ஊழல் விவகாரம்: அமலாக்கத் துறை மீது அவதூறு வழக்குத் தொடர ஆம் ஆத்மி முடிவு

காமதேனு

டெல்லி ஜல் வாரிய (டிஜேபி) ஊழல் வழக்கு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, அமலாக்கத் துறை மீது அவதூறு வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளது.

டெல்லி ஜல் வாரியத்தில் மின்காந்த ஓட்ட மீட்டர் கருவிகளை வழங்குவதற்கான டெண்டர் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

அமலாக்கத் துறை

மின்காந்த ஓட்ட மீட்டர் கருவிகள் வழங்குதல், நிறுவுதல், சோதனை மற்றும் இயக்குதல் (எஸ்ஐடிசி) மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கான ஒப்பந்தம் 'என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்' நிறுவனத்குக்கு கடந்த 2018 செப்டம்பர் 20-ம் தேதி அன்று ரூ.38.2 கோடிக்கு வழங்கப்பட்டது.

இதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் அமலாக்கத் துறைக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பு ஒன்றில், “டெல்லி ஜல் வாரிய முன்னாள் தலைமை பொறியாளர் ஒருவர் லஞ்சப் பணத்தை ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய நபர்களுக்கு வழங்கினார். அந்த பணம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் நிதியாக அனுப்பப்பட்டது. இதுகுறித்து விசாரணை மற்றும் டிஜிட்டல் சான்றுகள் உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், டிஜேபி அதிகாரிகள் அல்லது அதன் ஒப்பந்ததாரர்களின் தவறுகளை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த வழக்கில் ஆம் ஆத்மி அல்லது அதன் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ள அப்பட்டமான பொய் குற்றச்சாட்டை கண்டிக்கிறோம்.

அமலாக்கத்துறையால் நேற்று சோதனை செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவர்களிடமிருந்து ஒரு பைசா அல்லது ஒரு துண்டு ஆதாரம் கூட மீட்கப்படவில்லை. மோடி அரசு ஹிட்லரின் சித்தாந்தத்தில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. நீங்கள் (மோடி) ஒரு பொய்யை ஆயிரம் முறை மீண்டும் சொன்னால், மக்கள் அதை நம்பத் தொடங்குவார்கள்.

பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசும், அவர்களின் 'மாயாஜால்' அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை ஆம் ஆத்மி தலைவர்கள் மீது 230-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளன. இருப்பினும், ஒன்று கூட நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஊடகப் பரபரப்பை உருவாக்கி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை இழிவுபடுத்துவதே அவர்களின் ஒரே நோக்கம் என்பதை இது காட்டுகிறது.

எந்த ஆதாரமும் இல்லாமல் ஆம் ஆத்மி கட்சியின் பெயரை மீண்டும் குறிப்பிடுவதன் மூலம், அமலாக்கத்துறை பாஜகவின் ஊதுகுழலைத் தவிர வேறில்லை என்பதை நிரூபித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியை அவதூறு செய்ததற்காக அமலாக்கத்துறை மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

SCROLL FOR NEXT