ஆசிரியையை தாக்கும் மாணவன்
ஆசிரியையை தாக்கும் மாணவன் 
சர்வதேசம்

உலகம் முழுவதும் வேகமாக பரவும் வீடியோ... இந்த மாணவரின் செயலைப் பாருங்கள்!

காமதேனு

பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த ஆசிரியையின் கன்னத்தில் மாணவர் மாறி, மாறி அறையும் வீடியோ உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.

மனிதன் தன்னுடைய வாழ்க்கையை படிப்படியாக புரிந்துக் கொள்வதற்காக மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கலாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற அறம் போதிக்கப்படுகிறது. தாய், தந்தைக்கு அடுத்து அதிகம் மதிப்பு தரக்கூடியது குருவிற்குத் தான். இதன்பின் தான் கடவுளுக்கே இடம் தரப்படுகிறது.

ஆசிரியையை தாக்கும் மாணவன்

ஒரு மனிதனின் வாழ்க்கையை வழி நடத்துவது அவனுடைய கல்வி தான். அதனைக் கற்றுக் கொடுக்கும் குரு, கடவுளை விட மேலானவர் என்று கூறப்படுகிறது. ஆனால், கல்வி கற்றுத்தரும் குருவை, அனைத்து மாணவர்களின் மத்தியிலும் அடித்து மகிழும் மாணவர்கள் சிலரும் இருக்கிறார்கள். அப்படி ஒரு மாணவனின் வீடியோ தான் உலகம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. வகுப்பில் நாற்காலியில் ஆசிரியை அமர்ந்திருக்கிறார். அப்போது ஒரு மாணவர், ஆசிரியையின் கன்னத்தில் அறைகிறார். ஆனால், ஆசிரியை எதுவும் நடக்காதது போல், கலங்காமல் அமர்ந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் மீண்டும் ஆசிரியை கன்னத்தில் அறைகிறார்.

இதில் ஆசிரியையின் கண்ணாடி தெறித்து கீழே விழுகிறது. இதைப் பார்த்து மற்ற மாணவர்கள் சிரிக்கிறார்கள். தாக்கிய மாணவன் அத்துடன் விடாமல் ஆசிரியையை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இந்த காட்சிகள் முழுவதும் அடங்கிய வீடியோ தான் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

ஒழுக்கம் கற்றுத்தரும் கல்வி நிலையங்களில் மாணவர்களின் செயல்கள் அவர்களது பெற்றோர்களுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் பயன்தருவதாக இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற காலித்தனமான மாணவனின் நடவடிக்கையால் ஒட்டு மொத்த மாணவ உலகத்திற்கும் கெட்டப்பெயரை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மாணவனின் அடாவடி செயலுக்கு வடக்கு கரோலினா ஷெரிப் பாபி எஃப். கிம்ப்ரோ கிம்ப்ரோ ஜூனியர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் நோயல் கீனர் கூறுகையில், வைரலான வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பள்ளியில் ஒழுக்கம் குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

SCROLL FOR NEXT