உயிரிழந்த மொய்தீன் குட்டி
உயிரிழந்த மொய்தீன் குட்டி 
க்ரைம்

பகீர்... போலீஸ் விசாரணையில் வாலிபர் சுருண்டு விழுந்து சாவு: கேரளாவில் பரபரப்பு!

கவிதா குமார்

மலப்புரத்தில் காவல் நிலையத்தில் விசாரணையின் போது வாலிபர் சுருண்டு விழுந்து இன்று உயிரிழந்தார். ஆனால், போலீஸார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கேரளா மாநிலம், மலப்புரத்தில் உள்ள பாண்டிக்காடு போலீஸார், மொய்தீன் குட்டி(36) என்ற வாலிபரை விசாரணைக்கு இன்று வந்திருந்தார். பந்தலூர் கடம்போட்டைச் சேர்ந்த மொய்தீன் குட்டி, கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் போலீஸார் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மொய்தீன் குட்டி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், உடனடியாக பாண்டிக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மொய்தீன் குட்டியை கொண்டு சென்றனர். இதன்பின் பெரிந்தலமன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மொய்தீன் குட்டி உயிரிழந்தார்.

மொய்தீன்குட்டியை போலீஸார் தாக்கியதாக உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் குற்றம் சாட்டினர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததோடு, விசாரணை தொடங்கியவுடன் மொய்தீன் குட்டி சுருண்டு விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் மொய்தீன் குட்டி இருதய நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், அதனால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகவும் போலீஸார் கூறினர். இதய நோய்க்காக மொய்தீன் குட்டி சிகிச்சை பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார். காவல் நிலைய விசாரணையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம், மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பாஜக அமைச்சரவை திடீர் ராஜினாமா... ஹரியாணாவில் பரபரப்பு!

ஷாக்... பர்தா அணியாமல் சென்ற மனைவி: பிரியாணி கரண்டியால் அடித்துக் கொன்ற கணவன்!

சமகவை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்... மோடி காமராஜர் போல் ஆட்சி நடத்துவதாக புகழாரம்!

1 கோடி பெண்கள் குஷ்புவை கிழிச்சு தொங்கவிடுவாங்க... அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

ஷாக்... படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: லாரி மோதி உயிரிழந்த சோகம்!

SCROLL FOR NEXT