காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணா 
க்ரைம்

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... சேர்த்து வைக்கக்கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணா!

கே.காமராஜ்

தஞ்சாவூரில் தன்னை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திடீரென காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா (20). ஹரிப்பிரியா குழந்தையாக இருக்கும்போதே அவரது தாய் அனிதா இறந்துவிட்டார். தந்தை கருணாகரனும் இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு காலமாகிவிட்டார். பெரியப்பா பாஸ்கரன் ஆதரவில் ஹரிப்பிரியா இருந்து வந்தார். இந்நிலையில் அருகாமை கிராமமான வலசேரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரது மகன் பிரகாசுக்கும், ஹரிப்பிரியாவுக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

காதலித்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீர் தர்ணா

இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில், ஹரிப்ரியா கர்ப்பம் ஆகியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி ஹரிப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் ஹரிப்பிரியாவுக்கு பிறந்த குழந்தை தனக்கு பிறந்தது அல்ல எனக் கூறி பிரகாஷ் அவரை விட்டு விலகியுள்ளார். ஹரிப்பிரியா இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த சோதனையில் ஹரிப்பிரியாவுக்கு பிறந்த குழந்தையின் டிஎன்ஏவும், பிரகாஷின் டிஎன்ஏவும் ஒத்துப் போனது.

பட்டுக்கோட்டை காவல் நிலையம்

இதையடுத்து போலீஸார் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பிரகாஷ், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதாக ஹரிப்பிரியாவுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இன்று பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த ஹரிப்பிரியா, தனது கைக்குழந்தையுடன் திடீரென காவல் நிலையம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்த தகவல் அறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஹரிப்பிரியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, பிரகாஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தனது காத்திருப்பு போராட்டத்தை ஹரிப்பிரியா கைவிட்டார். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகிறது மழை!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு... குரூப் 2, 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!

மே 28 முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு; காவல் துறை அதிரடி

தாமதமாகும் ரெமல் புயல்... கடல் கொந்தளிப்பால் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னையில் திடீர் கனமழை பெய்தால்? தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய தகவல்!

SCROLL FOR NEXT