நாய் - மாதிரி படம் பீட்டா
க்ரைம்

டெல்லி அருகே நாய் சித்ரவதைக் கொலை... ‘கொலையாளி’ குறித்து தகவல் தருவோருக்கு ‘பீட்டா’ ரூ50,000 வெகுமதி அறிவிப்பு

காமதேனு

நொய்டாவில் நாய் ஒன்று கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி குறித்து தகவல் தருவோருக்கு ரூ50 ஆயிரம் வெகுமதி தரப்படும் என விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிறக்கும் உயிர்களில் பேதம் கிடையாது. அதிலும் நன்றியுள்ள ஜீவனான செல்லப் பிராணிகளை மனிதர்களுக்கு நிகராக கொண்டாடுவோர் உண்டு. அந்த நேசத்துக்குரிய உயிரினம் சித்ரவதை செய்து கொல்லப்படும்போது விலக்கு நல ஆர்வலர்கள் கொதித்தெழுவதும் நடக்கும். அதுதான் டெல்லி அருகே நொய்டாவில் இன்று நடந்திருக்கிறது.

தெரு நாய்

கடந்த வாரம் நொய்டாவில் உள்ள பன்மாடி அடுக்ககம் ஒன்றிலிருந்து நாய் ஒன்று தூக்கி எறியப்பட்டது. நாயை கொல்ல வேண்டும் என்ற நோக்கோடு நிகழ்த்தப்பட்ட இந்த சம்பவத்தில் அந்த ஜீவன் பரிதாபமாக உயிரிழந்தது. பல மாடிகள் உயரமான கட்டிடத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நாய், தரையில் சிதறி துடித்து இறந்தது மக்களை வருந்தச் செய்தது.

மே 9 அன்று நொய்டா விரிவாக்கத்தின் 16 பி பிரிவில் உள்ள அஜ்னாரா ஹோம்ஸ் சொசைட்டியில் நடந்த இந்த சம்பவம் குறித்து, நொய்டா காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதையொட்டி சர்வதேச அளவில் விலங்குகளுக்காக போராடி வரும், பீட்டா (பீப்பிள் ஃபார் எத்திக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ்) அமைப்பின் இந்தியக் கிளை சார்பாக முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.

நாயின் சிதைக்கப்பட்ட உடலின் சில படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதால், கொடூர சம்பவத்தின் துயரம் உள்ளூர்வாசிகள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்களின் கவலையைத் தூண்டியது. இணையத்தில் பரவிய கொடூரமான காட்சிகள், அந்த நாய் தனது துயரமான மரணத்திற்கு முன் அனுபவித்த துன்பங்களை தெளிவாக பதிவு செய்திருந்தது. நாயை சித்ரவதை செய்து கொன்ற நபரை விரைந்து கைது செய்ய ஏதுவாக பீட்டா அமைப்பின் சார்பில் ரூ50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டது.

பீட்டா

"குற்றவாளியைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், பீட்டா இந்தியாவின் அவசர உதவி எண்(9820122602) அல்லது மெயில் (Info@petaindia.org) மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும், தகவல் தந்தவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்" என்று பீட்டா அமைப்பு மேலும் அறிவித்திருந்தது. காவல் துறையும் நாயைக் கொன்ற மர்ம நபருக்கு எதிராக ஐபிசி பிரிவுகள் 429 மற்றும் 289-ன் கீழ் பிஸ்ராக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து விசாரித்து வருகிறது.

"விலங்குகளை கொடுமை செய்பவர்கள் பெரும்பாலும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே சக மனிதர்களின் பாதுகாப்பிற்காகவும், நாயைக் கொன்ற நபர் குறித்து தகவல் தர வேண்டும்” என பொதுமக்களை பீட்டா மேலும் கோரியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

SCROLL FOR NEXT