என்ஐஏ அலுவலகம் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்திக், விஷ்ணு. 
க்ரைம்

பரபரப்பு... இடும்பாவனம் கார்த்திக்கிடம் என்ஐஏ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை!

காமதேனு

துப்பாக்கி பறிமுதல் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் விஷ்ணு ஆகியோர் என்ஐஏ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஐஏ அலுவலகம் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்திக், விஷ்ணு.

சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கி பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சட்டை துரைமுருகன், இசை மதிவாணன், முருகன், இடும்பாவனம் கார்த்திக் மற்றும் தென்னகம் விஷ்ணு உள்ளிட்டோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் எல்டிடிஈ தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை பறிமுதல் செய்தாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பினர்.

இதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், இசைமதிவாணன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேரும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நேற்று ஆஜராகினர். இவர்களிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

என்ஐஏ அலுவலகம் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்திக், விஷ்ணு.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக் மற்றும் தென்னகம் விஷ்ணு ஆகியோர் இன்று காலை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர் . அவர்களிடம் தனித்தனியாக வைத்து என்ஐஏ எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு வெளிநாட்டில் இருந்து சந்தேகம்படும் படியான சில செல்போன் அழைப்புகள் வந்ததுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து என்ஐஏ அதிகாரிகள் வெளி நாட்டில் இருந்து தொடர்பு கொண்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்களை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி, கால் ரெக்கார்டுகளை சோதனை செய்து அதன்பின்பு பூந்தமல்லி நீதிமன்றத்தில் செல்போனை ஒப்படைத்துள்ளனர். செல்போனின் பதிவான அழைப்புகளை வைத்தும், வெளிநாட்டில் இருந்து பேசிய நபர் குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

SCROLL FOR NEXT