மேயர் மகேஷ், கவுன்சிலர் நவீன் 
க்ரைம்

கத்தியைக் காட்டி திமுக மேயருக்கு கொலைமிரட்டல்... காங்கிரஸ் கவுன்சிலர் தலைமறைவு!

காமதேனு

நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கு  கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் நாகர்கோவில் கடந்த 2019-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த மகேஷ் என்பவர் உள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்ட திமுக கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இதனால் இவருக்கும், திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜூக்கும் இடையே அவ்வப்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.

மேயர் மகேஷ்

இந்நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44-வது வார்டு கவுன்சிலர் நவீன் சில நாட்களாகவே மேயருக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த 11-ம் தேதி இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகாமையில் மேயர் தனது வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நவீன், மேயரின் வாகனத்தை இடிப்பது போல் காரை வேகமாக ஓட்டி வந்து நிறுத்தியுள்ளார். இதுகுறித்து மேயரின் உதவியாளர் கேட்டபோது, நவீன் கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

நேசமணி நகர் காவல் நிலையம்

இதுதொடர்பாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் மேயர் மகேஷ் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் நவீன் தலைமறைவாகியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் நாகர்கோவில் மாநகர தலைவராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது. தலைமறைவாகியுள்ள நவீனைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் மாநகராட்சி மேயருக்கு கொலை மிராட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தியில் கோயில் கட்ட மோடியைத் தான் ராமர் தேர்வு செய்தார்: அத்வானி திடீர் புகழாரம்!

அமலாக்கத்துறை நெருக்கடி... ஜன.18-ம் தேதி ஆஜராக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 4வது முறையாக சம்மன்!

இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும்: மாயாவதிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!

ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சர்ச்சைக்குள்ளான பெயர் பலகை!

திருநங்கை அப்சராவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: பிரபல யூடியூபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT