கொள்ளை சம்பவம் நிகழ்ந்த வீடு 
க்ரைம்

நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்... அச்சத்தில் தருமபுரி மக்கள்!

காமதேனு

தருமபுரியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு, தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அருகே உள்ள மொன்னையவன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் அரசு மதுபானக் கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி, நேற்று இரவு தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த சாந்தி, இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு

அப்போது வீட்டிற்குள் யாரோ சிலர் நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மின் விளக்கை போட்டுள்ளார். அப்போது வீட்டில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் சாந்தியின் கழுத்தில் இருந்த ஏழரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 47,000 பணம், 2 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்துச் சென்றிருந்தது தெரிய வந்தது.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜீவ் காந்தி

இதேபோல் பென்னாகரம் சாலையில் உள்ள நந்தி நகர் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணா ஃபுட்ஸ் அண்ட் சிப்ஸ் கடை உரிமையாளர் ராஜீவ் காந்தி, மனைவி ரேவதி உடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் கதவைத் தட்டிய முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல், ரேவதியின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால், அவர் அதனை தடுக்க முயற்சி செய்து, கூக்குரல் எழுப்பியதால் நகையை பறிக்க முடியாமல் முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மனைவியை காப்பாற்ற முயன்ற ராஜீவ் காந்தியை கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்கியதில், அவர் படுகாயம் அடைந்தார்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கொள்ளை நடந்த இரண்டு வீடுகளையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய முகமூடி கொள்ளையர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தருமபுரியில் ஒரே இரவில் இரண்டு இடங்களில் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து... வக்கீல் பரபரப்பு பேட்டி!

திடீர் பரபரப்பு... தொழில்நுட்ப கோளாறால் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்தி வைப்பு!

அதிர்ச்சி... பல்கலைக்கழக தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலம்!

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

பகீர் வீடியோ... 15வது மாடியில் இருந்து குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை! பெற்றோர்!

SCROLL FOR NEXT