தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் 
க்ரைம்

தாம்பரம் காவல் ஆணையருக்கு சம்மன்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காமதேனு

தாம்பரம் ஆணையரக கட்டிட வாடகை விவகாரம் தொடர்பாக தாம்பரம் ஆணையரும், தமிழக அரசும் பதிலளிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம்

கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் கூட்டாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் தங்களுக்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தை குத்தகைக்கு வழங்கியதாகக் கூறியுள்ளனர்.

மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்ணயித்து, 2022 ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஏற்ற வகையில் கட்டிடத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மாற்றி அமைத்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம்

ஒப்பந்தப்படி, 2022 ஜனவரி முதல் வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக நிர்ணயித்து, அதன் அடிப்படையில் 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்ததாகவும், இந்த தொகையை ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்தப்படுத்தியதால் பெற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், கட்டிடத்தை காலி செய்யாமல், 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரைக்குமான காலத்துக்கு வாடகையாக, 97 லட்சத்து 10 ஆயிரத்து 792 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரைக்கும், கட்டிடத்தை பயன்படுத்தியதற்காக அந்த தொகையை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டிடத்தைப் பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்பதால், அதனைக் காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மார்ச் 8-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தாம்பரம் காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

SCROLL FOR NEXT