மகன் பிரஜ்வல் ரேவண்ணா - தந்தை எச்.டி.ரேவண்ணா 
க்ரைம்

ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்... கர்நாடகாவில் பரபரப்பு!

காமதேனு

ஆள் கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ ஹெச்.டி.ரேவண்ணாவிற்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மஜத கட்சியின் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவற்றை 3,000 காணொலிகளாகப் பதிவு செய்திருப்பதாக வெளிவந்த வீடியோக்கள் அரசியலில் அனலை கிளப்பியுள்ளது. பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிலர் அளித்துள்ள புகாரில், பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா

இந்த நிலையில், ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தொகுதி எம்எல்வாக இருந்து வரும் எச்.டி. ரேவண்ணா, மைசூருவை சேர்ந்த பெண் ஒருவரை கடத்தியதாக சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையால் மே.4ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பாலியல் வழக்கில் தொடர்புடைய ஆள்கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணா தரப்பில் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

ரேவண்ணா

எச்.டி.ரேவண்ணாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவுற்ற நிலையில், இந்த மனுவை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஆள்கடத்தல் வழக்கில் ரேவண்ணாவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது. சாட்சியங்களைக் கலைக்க முற்படக் கூடாது எனவும், வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேவண்ணாவிற்கு ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், ரூ.5 லட்சத்திற்கான பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

SCROLL FOR NEXT