பிரதிமா 
க்ரைம்

கர்நாடகா பெண் அதிகாரி 8 நிமிடங்களில் குத்திக் கொலை: 600 பக்க குற்றப்பத்திரிகையில் திடுக் தகவல்!

காமதேனு

கர்நாடகா சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குநரான பிரிதிமா 8 நிமிடங்களில் குத்திக் கொலை செய்யப்பட்டதாக பெங்களூரு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பிரதிமா

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக இருந்தவர் பிரதிமா(45). இவர் கடந்த ஆண்டு நவ.4-ம் தேதி இரவு பெங்களூருவில உள்ள தொட்டகல்லாசந்திராவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அத்துடன் தங்கநகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்த போது, சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் ஓட்டுநராக முன்பு பணி செய்த கிரண் குமார்(31) என்ற வாலிபர் தான் பிரதிமாவை கொலை செய்தது தெரிய வந்தது.

பிரதிமா, கிரண் குமார்.

கொள்ளையடித்த பணத்தை தனது நண்பருடன் கொடத்து விட்டு தனது நண்பர்கள் இருவருடன் சாமராஜநகர மாவட்டத்தின் மகாதேஷ்வரா மலைக்குத் தப்பிச் சென்றார். அவரது செல்போனை வைத்து அவர் இருக்கும் இடத்தை சுப்ரணியபுரா போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

அப்போது பிரதிமாவை தான் கொலை செய்ததை கிரண் ஒப்புக்கொண்டார். தனக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்த பிரதிமா வீட்டில் காத்திருந்ததாகவும், ஆனால், வேலை தர மறுத்ததால் அவரைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் பிரதிமாவை கிரண் 8 நிமிடங்களில் கொலை செய்ததாக குற்றப்பத்திரிகையை பெங்களூரு போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். மூன்று மாத விசாரணைக்குப் பின் 70 சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களுடன் 600 பக்க ஆவணத்தை போலீஸார் சமர்பித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " கிரண் தனது கார் ஓட்டுநரான பிரதிமாவை பணிநீக்கம் செய்ததற்காக அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதிமாவின் அதிகாரப்பூர்வ கார் ஓட்டுநராக கிரண் பணியாற்றி வந்தார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக பலமுறை அவரை பிரதிமா திட்டியுள்ளார். இந்த நிலையில் வேலையில் இருந்து கிரணை அவர் நீக்கியுள்ளார்.

தன்னை மீண்டும் பணியில் அமர்த்துமாறு பிரதிமாவிடம் கிரண் வேண்டுகோள் விடுத்தார் ஆனால், பலனில்லை. இதனால் பிரதிமா மீது கோபம் கொண்டு பழிவாங்க நினைத்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு நவ.4-ம் தேதி பிரதிமாவை அவரது வீட்டிற்குள் நுழைந்து எட்டே நிமிடங்களில் கத்தியால் குத்திக் கொன்றதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

SCROLL FOR NEXT