பயணிகளின் உடமைகள் சோதனை 
க்ரைம்

மாம்பலம் ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு... பயணிகளின் உடமைகள் அதிரடி சோதனை

எம்.சகாயராஜ்

தசரா, தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பட்டாசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ரயில்வே பாதுகாப்பு படையினர் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் திடீரென சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகளின் உடமைகள் சோதனை

நாடு முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை மாம்பலம் ரயில் நிலைய ஆய்வாளர் தலைமையிலான ரயில்வே போலீஸார், தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பட்டாசுகள், மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை எடுத்துச் செல்வது குறித்தும், மாம்பலம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் இன்று சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

பயணிகளின் உடமைகள் சோதனை

அப்போது மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போது, ​​எந்த பொருட்களும் கைப்பற்றப்பட்ட இல்லை. மேலும் ரயில்களில் பட்டாசு, காஸ் ஸ்டவ், மண்ணெண்ணெய், சிலிண்டர்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ரயில்வே சட்டம் 1989ன் கீழ் விதிக்கப்படும் தண்டனைகள் குறித்தும் மாம்பலம் ரயில்வே ஆய்வாளர் பர்சா பிரவீன் பயணிகளிடம் எடுத்துரைத்தார்.

ரயில் நிலையத்தில் திடீரென பயணிகள் உடமைகளை சோதனை செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT