நடிகை கால் கடோட் குடும்பத்துடன்... 
சினிமா

நான்காவது பெண் குழந்தைக்கு தாயான வொண்டர் வுமன் நடிகை... குவியும் வாழ்த்துகள்!

காமதேனு

தன்னுடைய 38 ஆவது வயதில் நான்காவது பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் 'வொண்டர் வுமன்' நடிகை கால் கடோட். இதற்காக உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அவருக்கு இணையத்தில் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

வொண்டர் வுமன்

டிடெக்டிவ் காமிக்ஸ் என்று அழைக்கப்படும் டிசி யுனிவர்ஸ் ஹாலிவுட்டில் மிகப் பிரபலம். இந்த டிசி யுனிவர்ஸூக்கும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் வொண்டர் வுமன் கதைகளும் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரசித்தம். இதில் நடித்த நடிகை கால் கடோட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ‘ஃபாஸ்ட் & ஃபியூரியஸ்’ போன்ற ஹிட் சீரிஸ் படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஜரோன் வர்சனோ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறது.

நான்காவது குழந்தையுடன்...

இப்படியான சூழலில்தான் 38 ஆவது வயதில் தனக்கு நான்காவது குழந்தை பிறந்திருப்பதை தெரிவித்து இருக்கிறார் கால் கடோட். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் என்ற நிலையில், தற்போது நான்காவது குழந்தையும் பெண் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையுடன் மருத்துவமனையில் எடுத்தப் புகைப்படம் மூலம் இதை உறுதி செய்துள்ளார் கால் கடோட். இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள், ‘நீங்கள்தான் ரியல் வொண்டர் வுமன்’ என வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...  

#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ரோட்டில் நடந்த திருமணம்... கிறிஸ்தவ பெயரால் இந்துப் பெண்ணின் திருமணத்திற்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு!

அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67,00,000 குழந்தைகள் பட்டினியால் அவதி!

ஆட்சிக்கு ஆபத்தா?! கலங்கும் உடன்பிறப்புகள்... தஞ்சை பெரியகோயில் அகழியில் பயங்கர தீ விபத்து!

அடுத்த அதிர்ச்சி...17 வயது மாணவியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டுப் பலாத்காரம்!

SCROLL FOR NEXT