இயக்குநர் இரஞ்சித் 
சினிமா

கற்பூரம் ஏற்றவில்லை எனில் தீவிரவாதி ஆகிவிடுவோம்... இயக்குநர் ரஞ்சித் பரபரப்பு பேச்சு!

காமதேனு

கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் எல்லாம் தீவிரவாதி ஆகிவிடுவோம் என இயக்குநர் ரஞ்சித் ‘ப்ளூ ஸ்டார்’ பட விழாவில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’ப்ளூ ஸ்டார்’...

ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் வருகிற 25ம் தேதி திரையங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்தப் படத்தினை இயக்குநர் ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, “இன்று ரொம்பவும் முக்கியமான நாள். வீட்டிற்கு சென்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் அனைவரும் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் இன்னும் 5-10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயத்தைத் தருகிறது.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி.

அப்படியான காலக்கட்டத்திற்குள் நுழையும் முன்பு, நம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத் தனத்தையும் தினமும் சொல்லிக் கொடுக்கப்படும் மதவாதத்தையும் நம்மிடம் இருந்து அழிக்க கலையை ஒரு கலையாகப் பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த நாள் முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த நாளில் இருந்து புதிய வரலாறு ஆரம்பிக்கிறது. அந்த வரலாற்றில் நாம் எங்கு இருக்கப் போகிறோம் என்ற யோசனை நமக்கு வேண்டும். ’ப்ளூ ஸ்டார்’ என்ற பெயரே அரசியல்தான். அந்த நீல நட்சத்திரம் நம்மை சரியாக வழிநடத்தும் என நம்புகிறேன். ஜெய்பீம்!” எனப் பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... பக்தி பரவசமூட்டும் புகைப்படத்தொகுப்பு!

பகீர்... காரில் ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாக ரூ.1.90 கோடி ஹவாலா பணம் கடத்தல்: இருவர் கைது!

சிறுக சிறுக பணம் சேமிப்பு... கோவாவிற்கு விமானத்தில் பறந்த பீடி சுற்றும் தொழிலாளர்கள்!

அதிர்ச்சி... கார்ட்டூன் பார்த்த 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு!

குடித்துவிட்டு வந்து தினமும் தாக்குவார்: நடிகை ஷகிலா மீது வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்!

SCROLL FOR NEXT