பக்தி பரவசமூட்டும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா... புகைப்படத் தொகுப்பு!

வெப் ஸ்டோரீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணியளவில் விமான மூலம் அயோத்தி நகர் வந்து சேர்ந்தார். 

இந்த விழாவிற்கு அனுமதிக்கப்பட்டிருந்த 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னதாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர். 

பட்டு வேட்டி சட்டையில் கோயிலுக்குள் வந்த பிரதமர் நரேந்திர மோடி தனது கையில் குழந்தை ராமருக்கான வஸ்திரம் மற்றும் சிறிய குடை ஆகியவற்றை ஏந்தி வந்தார். 

இதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

குழந்தை ராமருக்கான சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன.

மலர்களாலும் நகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தார் பால ராமர்.

இதற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கோயிலின் உட்புறமும், வெளிப்புறமும் வண்ண விளக்குகளாலும். மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக பல திரைப்பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், நடிகை கங்கனா ஆகியோர் இதில் அடக்கம்.

நடிகை கத்ரீனா தனது கணவர் விக்கி கெளஷலுடன் கலந்து கொண்டார்.

அலியாபட்டும் தனது கணவர் ரன்பீருடன் கலந்து கொண்டார்.

நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் அண்ணனுடன் பங்கேற்றார்.

நடிகர் அமிதாப்பும் தனது மகன் அபிஷேக் பச்சனுடன் கலந்து கொண்டார்.