இயக்குநர் ஹரி- விஷால்
இயக்குநர் ஹரி- விஷால் 
சினிமா

விஷால் அரசியல் எனக்குத் தெரியாது... பம்மிய இயக்குநர் ஹரி!

காமதேனு

விஷாலின் அரசியல் வருகை குறித்தான கேள்விக்கு, "அது பற்றி எனக்குத் தெரியாது. அவர் சொல்லும் விஷயம் வேறு" என இயக்குநர் ஹரி மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்.

’தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு விஷால்- ஹரி இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’. வரும் 26ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இதற்காக, படத்தின் புரோமோஷன் பணிகளில் இயக்குநர் ஹரி தீவிரமாக உள்ளார். இன்று திருச்சியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரசிகர்களுடன் டீசர் பார்த்து மகிழ்ந்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குநர் ஹரி, “படத்தில் ஒவ்வொரு சண்டை காட்சிகளும் மிகவும் விறுவிறுப்பாக செய்துள்ளோம். முகம் சுழிப்பது போல் இருக்காது. குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்கலாம்” என்றார். பின்பு விஜய் மற்றும் விஷாலின் அரசியல் வருகை குறித்தான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அரசியல் நல்லது தான். இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஒரு நடிகர் சேவை செய்கிறேன் என்பது போற்றப்பட வேண்டிய வார்த்தை.

அவர் நல்லபடியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். விஷால் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், அதுபற்றி எனக்கு உறுதியாக தெரியாது” என்று மழுப்பினார். அதேபோல, ‘சிங்கம்4’ உருவாகாது என்றவர் நிச்சயம் போலீஸ் கதை ஒன்று செய்வதாகவும் சொன்னார்.

படத்தில் கெட்ட வார்த்தைகள் வருகிறது என்ற கேள்விக்கு, “கெட்ட வார்த்தைகள் கோபத்தில் வருவது தான். தகராறு ஏற்பட்டால் எல்லா வார்த்தைகளும் வந்துவிடும். சும்மா இருக்கும் போது யாரும் அதை பேசுவதில்லை. சென்சாருக்கு போகிற போது சில விஷயங்கள் கண்டிஷன் செய்கிறார்கள். எல்லாவற்றையும் அப்படியே நாங்கள் பார்வையாளர்களிடம் கொடுப்பதில்லை. அதற்குரிய தேவை இருந்தால் மட்டுமே சென்சாரில் அனுமதிக்கின்றனர். இல்லையென்றால் அனுமதிப்பதில்லை” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

SCROLL FOR NEXT