மஞ்சுமல் பாய்ஸ் - அனுராக்  
சினிமா

மலையாள இயக்குநர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது... அனுராக் காஷ்யப் பாராட்டு!

காமதேனு

"பிரம்மயுகம், மஞ்சுமல் பாய்ஸ், காதல் தி கோர் போன்ற பொக்கிஷமான படங்களை எடுக்கும் மலையாள இயக்குநர்களை நினைத்து பொறாமையாக இருக்கிறது" என்று பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் புகழ்ந்துள்ளார்.

மஞ்சுமெல் பாய்ஸ்

'குணா' குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படை வைத்து மலையாளத்தில் எடுக்கப்பட்ட 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. முக்கியமாக, கதைக்களமும், கன்மணி அன்போடு காதலன் எனும் தமிழ் பாடல் பயன்படுத்தியதும், தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிட்டது. அதனால், மலையாளத்தை விட தமிழகத்தில் தான் வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது. ரூ.100 கோடிக்கு மேல் இப்படம் வசூல் சாதனையை செய்து வருகிறது.

இப்படக்குழுவை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டினார். இதுபோல அனைத்து மொழிக்கலைஞர்களும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தை பாராட்டி வருகின்றனர். இப்படத்தை பார்த்த இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், "மலையாள திரைப்பட இயக்குநர்களை நினைத்து மிகவும் பொறாமையாக இருக்கிறது" என்று வெகுவாக பாராட்டியுள்ளார். மசாலா படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தி சினிமா உலகில், கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர், ராமன் ராகவ், பிளாக் ஃப்ரைடே உள்ளிட்ட மாற்று சினிமாக்களை எடுத்து வருகிறார் அனுராக். மேலும், நல்ல கதை அம்சம் உள்ள தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களை தவறாது பாராட்டி வருகிறார் அனுராக் காஷ்யப்.

படக்குழுவை பாராட்டிய கமல்

இப்படம் குறித்து பாராட்டி பேசிய அனுராக் காஷ்யப், "மம்முட்டி நடித்த பிரம்மயுகம், மஞ்சுமல் பாய்ஸ் என்ற இரண்டு அட்டகாசமான படங்களைப் பார்த்தேன். முக்கியமாக, மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநரின் நம்பிக்கை, கதை சொல்லல் முறையும் கமர்ஷியல் படங்களில் ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தியாவில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை விட இது பெரியது. நம்பிக்கை மிகுந்த நம்பமுடியாத கதை சொல்லும் பாணி.

இதை எப்படி தயாரிப்பாளரிடம் கூறி சம்மதிக்க வைத்தார் எனத் தெரியவில்லை. மலையாள இயக்குநர்களின் தைரியம், பிடிவாதம் மற்றும் திரைப்படமாக்குதலில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களை நினைத்து நான் மிகவும் பொறாமைப்படுகிறேன்" என்று பாராட்டியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...  

#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ரோட்டில் நடந்த திருமணம்... கிறிஸ்தவ பெயரால் இந்துப் பெண்ணின் திருமணத்திற்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு!

அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67,00,000 குழந்தைகள் பட்டினியால் அவதி!

ஆட்சிக்கு ஆபத்தா?! கலங்கும் உடன்பிறப்புகள்... தஞ்சை பெரியகோயில் அகழியில் பயங்கர தீ விபத்து!

அடுத்த அதிர்ச்சி...17 வயது மாணவியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டுப் பலாத்காரம்!

SCROLL FOR NEXT