வருங்கால கணவருடன் நடிகை ரகுல்  
சினிமா

நாளை திருமணம்... ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் மாப்பிள்ளை ஜாக்கி போட்ட கண்டிஷன்!

காமதேனு

திருமணம் நாளை நடக்க இருக்கும் நிலையில், நடிகை ரகுல் வீட்டில் மாப்பிள்ளை ஜாக்கி போட்ட கண்டிஷன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. என்ன கண்டிஷன் என்பதை இங்கு பார்க்கலாம்.

வருங்காலக் கணவருடன் ரகுல் ப்ரீத் சிங்

சமீப காலமாக இயற்கை சூழலில், மாசு ஏற்படுத்தாத முறையிலும் திருமணம் செய்வது என்ற விஷயம் டிரெண்டாகி வருகிறது. சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத இந்த திருமணங்கள் பலர் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரகுல் ப்ரீத் சிங் -ஜாக்கி ஜோடியும் இதே முறையை பின்பற்ற இருக்கிறது. அந்த விஷயம் தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, 'அயலான்' போன்றப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இப்போது திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் ரகுல். பாலிவுட் நடிகர், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி என்பவரைத்தான் காதலித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஜோடி தனது காதலை அறிவித்தது. நாளை கோவாவில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெற உள்ளது. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில் பங்கேற்க உள்ளனர். கடற்கரைப் பின்னணியில் இயற்கை சூழலுடன் அலங்கரிக்கப்பட்ட இந்த அழைப்பிதழ் இணையத்தில் டிரெண்டானது.

ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரகுல் ப்ரீத் சிங் காதலர் ஜாக்கி பாக்னானி ரகுல் குடும்பத்திடமும் தன் கண்டிஷனை சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார். அதாவது திருமணத்தை முடிந்தளவு இயற்கை சூழலிலேயே நடத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கான ஆரம்பத்தை அழைப்பிதழில் இருந்தே ஆரம்பித்து இருக்கிறார்கள். அதாவது, சூழழை மாசுபடுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் டிஜிட்டல் முறையிலேயே அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளாராம்.

அதே போல் திருமணத்தை பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ள ஜாக்கி பாக்னானி, அந்தக் கொண்டாட்டத்திற்குப் பதிலாக மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்திருக்கிறார். திருமணத்திற்க்கு வரும் விருந்தினர்களுக்கும் செடிகள், விதைகள் போன்றவற்றை வழங்க உள்ளார். திருமண விருந்தில் உடலுக்குத் தீங்காகக் கருதப்படும் குளுட்டன், சர்க்கரை இல்லாத உணவுகளைத் தான் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். இதில் பாரம்பரியமான உணவுகளையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தன் திருமணத்திற்காக பார்த்து பார்த்து ஏற்பாடு செய்திருக்கும் ரகுல்- ஜாக்கி ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதையும் வாசிக்கலாமே...


நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

மத்திய அரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள்...'டெல்லி சலோ' மீண்டும் நாளை தொடங்குகிறது!

சென்னையில் மமக நிர்வாகி மீது தாக்குதல்...திமுக செயலாளர் மீது வழக்கு!

ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளிப் பொருட்கள் தமிழகம் வருகிறது!

அந்த வீடியோவை காண்பித்து நோயாளிக்கு அறுவை சிகிச்சை... ஆந்திராவில் நடந்த சுவாரஸ்யம்!

SCROLL FOR NEXT