மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி 3ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நிறுத்தப்பட்டது.

இந்த ஆண்டில் கர்நாடகா உரிய அளவில் காவிரி நதிநீரை பகிர்ந்தளிக்காத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பா பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

இதனைத் தொடர்ந்து சம்பா நெற்பயிரின் விவரம் குறித்து தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், விவசாயிகள் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட தமிழக அரசு உத்தர பிறப்பித்தது.

இதனையடுத்து பிப்.3-ம் தேதி மாலை 6 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு மறுநாள் வினாடிக்கு 5000 கன அடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

அரசு உத்தரவுப்படி வெள்ளிக்கிழமை வரை 2 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் மேலும் கால நீட்டிப்பு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடி வீதம் இன்று மாலை 6 மணி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் கதவணைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின் உற்பத்தி ஆகியவை தடைபட்டுள்ளன. மேலும், தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in