குறுவை சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு ரூ.13,500 இழப்பீடு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

காவிரி ஆற்றில், கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 12-6-2023 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணத்தால், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் 5.75 லட்சம் ஏக்கரில் இலக்குகளை தாண்டி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் தொடந்து கோரிக்கை விடுத்து வந்தனர். போதிய அளவில் தண்ணீரின்றி குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், முதலமைச்சர் ஹெக்டேருக்கு ரூ,13,500 வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in