டீ, காபி காதலர்களுக்கு கெட்ட சேதி... இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புதிய எச்சரிக்கை

டீ
டீ

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியிருக்கும் புதிய உணவு வழிகாட்டுதல்களில், டீ மற்றும் காபி காதலர்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்திருக்கிறது.

அன்றாடம் பல முறை டீ அல்லது காபி அருந்துவதை கட்டாயம் கடைபிடிப்போர் நம்மில் ஏராளமாக உள்ளனர். புகை, புகையிலை அளவுக்கு அதில் பாதிப்பு இல்லாததோடு, உடலுக்கு ஆரோக்கியம் பாவிக்கும் காரணிகள் அதில் அதிகமிருப்பதாக அவர்கள் காரணங்களை முன்வைப்பார்கள். ஆனல் இந்த டீ, காபி அருந்துவதாலும், அதிலுள்ள காஃபின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) அறிவித்துள்ளது.

காபி
காபி

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் உடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்த புதிய உணவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட 17 வழிகாட்டுதல்களில், தேநீர் மற்றும் காபி நுகர்வுகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்துகின்றன.

இந்த இரண்டு பிரபலமான பானங்களிலும் அதிக அளவு காஃபின் உள்ளது. மேலும் விரும்பிய அளவை விட அதிகமாக உட்கொள்வது உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கும். காஃபின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது வழிகாட்டுதல்களில், இந்த இரண்டு பானங்களிலும் அதிக அளவு காஃபின் உள்ளதாக எச்சரித்துள்ளது.

150 மிலி காய்ச்சிய காபியில் 80-120 மில்லிகிராம் காஃபின் உள்ளது. இதுவே இன்ஸ்டண்ட் காபியில் 50-65 மிகி, தேநீரில் 30-65மிகி என்பதாக காஃபின் உள்ளது. ஒரு நாளில் 300 மில்லிகிராம் காஃபினுக்கு மிகையாக உட்கொள்வது நல்லதல்ல எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்துகிறது.

ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர்

மேலும், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ மற்றும் காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. உணவுக்கு முன் அல்லது பின் இந்த பானங்களை உட்கொள்வது, அதிலுள்ள டானின்கள் காரணமாக, உடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதைக் கட்டுப்படுத்தும் என்றும் ஐசிஎம்ஆர் எச்சரிக்கிறது. அதிக அளவு டானின்கள் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகைக்கு வழிவகுக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

சரிவிகித உணவு
சரிவிகித உணவு

இருப்பினும், பால் இல்லாத தேநீர் நல்ல இரத்த ஓட்டம் மற்றும் கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்று புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவும் என்றும் தெரிவிக்கிறது. காய்கறிகள், கொழுப்பு குறைவான இறைச்சிகள், கடல் உணவுகள், முழு தானியங்கள் நிறைந்த உணவுகளையும் ஐசிஎம்ஆர் ஊக்குவிக்கிறாது. இத்துடன் ஆரோக்கிய வாழ்வுக்கு, எண்ணெய், சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை அளவோடு நுகர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in