அமெரிக்காவில் கால் பரப்பும் அமுல் பால்... சர்வதேச சந்தையில் அடுத்தக்கட்டப் பாய்ச்சல்

அமெரிக்காவில் அமுல்
அமெரிக்காவில் அமுல்

இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக பிரபலமாகியிருக்கும் அமுல் பால் மற்றும் தயாரிப்புகள் தற்போது அமெரிக்காவிலும் அடியெடுத்து வைக்கின்றன.

இந்தியாவின் பெருமைக்கும், பிரம்மாண்டத்துக்கும் உரிய பால் பிராண்ட் அமுல். குஜராத்தை மையமாகக் கொண்ட கூட்டுறவு நிறுவனமாக வளர்ந்திருக்கும் அமுல், இந்தியாவில் வெண்மை புரட்சிக்கும் வித்திட்டது. குஜராத்தின் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் தலையெழுத்தை மாற்றியமைத்தது.

அமுல் தயாரிப்புகள்
அமுல் தயாரிப்புகள்

குஜராத்தை அடுத்து இந்தியாவின் இதர மாநிலங்களிலும் அமுல் கால் பரப்பியதில், அதுவே சர்ச்சைக்கும் ஆளானது. உள்ளூர் பால் நிறுவனங்கள் மற்றும் பால் கூட்டுறவு அமைப்புகளை அமுல் ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழகத்தில் ஆவின் நிறுவனமும், கர்நாடகத்தில் நந்தினியும் இவ்வாறு அமுலுக்கு எதிராக கொந்தளித்தன. ஆனபோதும் அமுலின் அபரிமித வளர்ச்சிக்கு அணைபோட இயலவில்லை.

மோடி. அமித் ஷா என குஜராத் பின்னணியிலான இருபெரும் தலைவர்கள் நாட்டை ஆள்வதும், மாநிலத்தின் அமுல் வளர்ச்சிக்கு பக்கபலமாகி வருகிறது. இந்த வகையில் இந்தியாவில் மட்டுமன்றி ’குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு’ சர்வதேச பாய்ச்சலும் எடுத்துள்ளது. 50க்கும் மேலான நாடுகளுக்கு அமுல் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் ஏற்றுமதிக்கு அப்பால் நேரடியாக, கறந்த பாலினை விநியோகிக்கும் ஏற்பாடுகளிலும் அமுல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக அடுத்த வாரம் முதல் அமெரிக்காவில் தனது பிரத்யேக பால் வகைகளில் நான்கினை அறிமுகப்படுத்துகிறது. அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் மற்றும் ஆசிய மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு வெளியே ப்ரஷ் அமுல் பாலை விற்பனை செய்வதற்கான முதல் பாய்ச்சலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அமுல் கண்காட்சியில் பிரதமர் மோடி
அமுல் கண்காட்சியில் பிரதமர் மோடி

இதனை அமுல் நிறுவனத்தை இயக்கும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா உறுதி செய்துள்ளார். இதன்படி அமுல் கூட்டமைப்பு அமெரிக்காவின் 108 ஆண்டுகள் பழமை வாய்ந்த பால் கூட்டுறவு நிறுவனமான மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இணைந்து அமெரிக்கர்களுக்கான, அங்கேயே கறந்த பாலை விநியோகிக்க ஏற்பாடாகி உள்ளது. இதனுடன் இணைந்து அமுல் பிராண்டிங்கை முன்னிலைப்படுத்தும் பால் மற்றும் பால் பொருட்களும் சந்தையில் அறிமுகமாகின்றன.

’அமுல் தாசா, அமுல் கோல்ட், அமுல் சக்தி மற்றும் அமுல் ஸ்லிம் அன்ட் டிரிம்’ ஆகியவை நியூயார்க், நியூஜெர்சி, சிகாகோ, வாஷிங்டன், டல்லாஸ் மற்றும் டெக்சாஸ் ஆகிய பிராந்தியங்களின் சந்தைகளுக்கும் படிப்படியாக பரவ இருக்கின்றன. பாலைத் தொடர்ந்து அமெரிக்க சந்தைக்கான பனீர், தயிர் மற்றும் மோர் உள்ளிட்ட பால் பொருட்களையும் அமுல் அறிமுகப்படுத்த உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in