ரயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சி- நாகையில் விவசாயிகள் கைது

நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் காய்ந்த குறுவை பயிர்களை கைகளில் ஏந்தியபடி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட வேண்டிய நீரை உடனடியாக திறக்க கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீர் பற்றாக்குறையால் காய்ந்துள்ள குறுவை பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கோரிக்கைகளை முன்வைத்து நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூரில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதன்படி, கைகளில் காய்ந்த குறுவை பயிர்களை ஏந்தியபடி, நூற்றுக்கணக்கான விவசாயிகள், கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகே திரண்டனர். அப்போது, குறுவை பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை தர வேண்டும் எனவும், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விவசாயிகளை கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தொடர்ந்து முன்னேறியதால், அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in